ரஷ்யாவில் சோசலிசப் புரட்சி லெனின் தலைமையில் 1917 ஆம் ஆண்டு நவம்பர் 7 அமைந்ததையொட்டி இந்நாளை கம்யூனிஸ்ட் கட்சியினர் புரட்சி தினமாக கடைபிடித்து வருகின்றனர். அதனை முன்னிட்டு பெரம்பலூர் துறைமங்கலத்திலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் கொடியேற்றி துவக்கப்பட்ட விழாவிற்கு வட்டசெயலாளர் (பொ) எஸ்.பி.டி.ராஜாங்கம் தலைமை வகித்தார். வட்டக்குழு உறுப்பினர் கருணாநிதி முன்னிலை வகித்தார். சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் ஆர்.அழகர்சாமி கொடியேற்றினார்.. மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆர்.இராஜகுமாரன், எ.கணேசன், வட்டக்குழு உறுப்பினர்கள் பி.கிருஷ்ணசாமி, ஆர்.முருகேசன், பி.முத்துசாமி, பி.ரெங்கராஜ், சி.சண்முகம், கலந்து கொண்டனர். பின்னர், நான்கு ரோடு மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு சிபிஎம் பன்னீர்செல்வம் தலைமையில் கொடியேற்றப்பட்டது. புதிய பேருந்து பழையபேருந்து நிலையம், அம்மாபாளையம், வெள்ளனூர் உள்பட 14 இடங்களில் கொடியேற்றி கொண்டாடப்பட்டது. மற்றும் அக்கட்சியின் பிற உறுப்பினர்களும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.