மாவட்ட ஆட்சித்தலைவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

உத்ரா கண்ட் மாநிலம், டேராடூனில் உள்ள ராஸ்ட்ரிய இந்திய மிலிடரி கல்லூரியில் எட்டாம் வகுப்பில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஏழாம் வகுப்பு படித்து முடித்தவர்கள். படித்துக் கொண்டிருப்பவர்கள், 11½ முதல் 13½ வயதுள்ளவா;கள், 02-07-2003-க்குபின் 01-01-2005-க்குள் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான தகுதித்தேர்வு 01-12-2015 முதல் 02-12-2015 வரை நடைபெறும். இதில் ஆங்கிலத்தேர்வு 125 மதிப்பெண்களுக்கு 2 மணிநேரமும், பொது அறிவுத்தேர்வு 75 மதிப்பெண்களுமக்கு 1 மணி நேரமும் நடைபெறும். வாய்மொழி தேர்வுக்கு 50 மதிப்பெண்கள். இது 05-04-2016 அன்று நடைபெறும். விண்ணப்பங்களை பதிவஞ்சலிலும், Speed Post-லும், ‘The Commandant, RIMC, Dehradun 248003 , Utrakhand என்ற முகவரியில் பெற்றுக் கொள்ளலாம்.

பதிவஞ்சலில் பெற ரூ. 430-ம் Speed Post-ல் பெற ரூ. 480ஃ-ம் அனுப்ப வேண்டும். இது SC/ST தரத்தினருக்கு முறையே ரூ. 385- மற்றும் ரூ.435- அனுப்பினால் போதும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ‘The Controller of Examinations, TNPSC சென்னை-3-க்கு 30-09-2015-க்குள் அனுப்பப்படவேண்டும்.
எழுத்துத் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வுகள் எந்த இடத்தில் என்பது Hall Ticket பெறும்போது தெரியவரும். இதுபற்றி மேலும் விவரம் அறிய www.rimc.gov.in , என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

என மாவட்ட ஆட்சித்தலைவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்

Join Free Now https://dsmatrimony.com/

Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!