பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் வெள்ளுவாடி – சோலைநகர் பகுதியை இனைக்கும் எள்ஓடை குறுக்கே ரு.1 கோடியே 72 லட்சம் மதிப்பில் மாநில உள் கட்டமைப்பு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மேம்பாலம் கட்டுவதற்கான பூமிபூஜையை பெரம்பலூர் சட்ட மன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் தமிழ்ச் செல்வன் பேசியதாவது:
வேப்பந்தட்டை வட்டத்திற்குட்ப்பட்ட காரியனூர் பகுதியில் வெள்ளுவாடி – சோலைநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் இந்த புதிய மேம்பாலம் கட்டப்படுவதன் மூலம் இப்பகுதி மக்கள் விரைவாக மாவட்ட தலைநகரான பெரம்பலூரை அடைய முடியும். இதன் மூலம் மக்களின் வீண் அலைச்சல் குறைவதுடன் பயண நேரமும் வெகுவாக குறையும்.
இந்த பாலம் 6 கண்வாய்களை கொண்டதுடன், 50.4 மீ நீளம் கொண்டது. மேலும் தரைமட்டத்திலிருந்து 4 மீ உயரமும் கொண்டது. இதன் மூலம் மழைக்காலங்களில் ஏற்படும் அதிப்படியான மழை நீர் விரைவாக வெளியேரும் வசதியும் கொண்டது.
பாலப்பணிகள் விரைவாக துவங்கப்பட்டு இன்னும் 6 மாத காலத்திற்குள் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என சட்டமன்ற உறுப்பினர் தமிழச்செல்வன் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் வேப்பந்தட்டை ஒன்றியக்குழுத்தலைவர் ஜெயலெட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோவன், ஒன்றிய பொறியாளர் மனோகரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் செல்வமணி, ஊராட்சி மன்றதலைவர் தங்கம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.