பெரம்பலூர் : இன்று தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா, பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.33 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட யோகா மற்றும் இயற்கை நல மருத்துவ பிரிவின் புதிய கட்டிடத்தினை தலைமை செயலகத்திலிருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
அதனைத்தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் மருதராஜா, சட்டமன்ற உறுப்பினர் தமிழ்செல்வன் ஆகியோரது முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் தரேஸ்அஹமது மருத்துவமனை வளாகத்தில் இருந்த நோயாளிகள் மற்றும் பார்வையாளர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் இரமேஷ், இணைஇயக்குநர் (சுகாதாரப்பணிகள்) உதயக்குமார், மருத்துவமனை கண்காணிப்பாளர் சசிகலா, உதவி செயற்பொறியாளர் பிரேமானந்தகுமார் உள்ளிட்டோர் பங்குபெற்றனர்.