பெரம்பலூர்: பெரம்பலூர் வேப்பந்தட்டையில் ரூ 7.25 கோடி மதிப்பீட்டில் அரசு கலைக் கல்லூரி கட்டிடம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது. இதில் தமிழக அரசின் உயர்கல்வி துறை செயலாளர் அபூர்வா கலந்து கொண்டார்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையில் கடந்த ஆண்டு புதிய அரசு கலை மற்றும் அறிவியியல் கல்லூரியை முதல் அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். அதனைத்தொடா;ந்து அரசு கல்லூரி வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள பழையக் கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்நிலையில் கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு ரூ.7.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்து கானொலி காட்சி மூலம் முதல் அமைச்சர் ஜெயலலிதா கடந்த மாதம் அடிக்கல் நாட்டினார்.
இதனைத்தொடர்ந்து பருத்தி ஆராய்ச்சி நிலையம் அருகில் வேப்பந்தட்டை பொதுமக்களால் வழங்கப்பட்ட 10 ஏக்கர் நிலத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு 43 ஆயிரம் சதுர அடியில் 3 அடுக்கு மாடியுடன் 14 வகுப்பறை மற்றும் ஆய்வகம் கொண்ட கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது.
இதில் அரசு உயர்கல்வி துறை செயலாளர் அபூர்வா, கலெக்டர் தரேஷ் அகமது, பெரம்பலூர் தொகுதி எம்.எல்.ஏ, வேப்பந்தட்டை அ.தி.மு.க ஒன்றிய செயலாளா; சிவப்பிரகாசம் , பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சீனிவாசன், பொறியாளர்கள் கனகராஜ், மணிவண்ணன், ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளர் செல்வகுமரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மேலும், இந்த கல்லூரிக்கு மாவட்ட கலெக்டரின் பொதுநிதியிலிருந்து ரூ.1கோடியே 17 லட்சம் மதிப்பீட்டில் சாலை, தெருவிளக்கு, நுழைவு வாயில் வளைவு, நிழற்குடை மற்றும் சுற்று சுவர் விரைவில் அமைக்கப்பட உள்ளதாக செயற்பொறியாளர் செல்வகுமரன் தெரிவித்தார்.