பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் உள்ள ரெப்கோ வங்கியில் மே 25 முதல் 30 ஆம் தேதி வரை கடன் வழங்கும் முகாம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து வங்கியின் கிளை மேலாளர் ஜெயப்பிரகாஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் உள்ள ரெப்கோ வங்கிக் கிளையில் மே 25 முதல் 30 ஆம் தேதி வரை சிறப்பு கடன் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது. இதில், மகிளா சக்தி எனும் புதிய கடன் வழங்கும் திட்டம் பெண்களுக்காக சிறப்பாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வர்த்தகர்களுக்காக ரெப்கோ டிரேடர்ஸ் டிலைட் எனும் கடன் வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த முகாமில் வர்த்தகத்தை மேம்படுத்துதல், செயல்பாட்டு மூலதனம் பெற, இதர கடன் தேவைகளுக்கு குறைந்த வட்டியில் கடனுதவி வழங்கப்படும்.
இந்த வாய்ப்பை பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்களும், வர்த்தகர்களும் பயன்படுத்திக்கொள்ளலாம் எனத் தெரிவித்தார்