பெரம்பலுார் : லட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் பாராமெடிக்கல் சயின்ஸ் கல்லுாரியில் டிஜிட்டல் வகுப்பறை திறப்பு விழா மற்றும் மாணவிகளுக்கான ஊக்குவிப்பு பயிற்சி வகுப்பு கல்லுாரி ஆடிட்டோரியத்தில் நடந்தது.
விழாவிற்கு லட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் பாராமெடிக்கல் சயின்ஸ் கல்லுாரியின் சேர்மன் டாக்டர் கருணாகரன் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் தங்கராசு முன்னிலை வகித்தார்.
விழாவில் அஜய் எலும்பு மூட்டு மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் அறிவழகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு டிஜிட்டல் வகுப்பறையை திறந்து வைத்தும, பயிற்சி வகுப்பை துவக்கி வைத்து பேசியதாவது:
பிறக்கும்போது குழந்தைகள் யாரும் எதையும் தெரிந்துகொண்டு வருவதில்லை. கல்வியை கற்கும் போது எல்லாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பது அவசியமி்ல்லை. நமக்கு இது தெரியவில்லையே என்று யாரும் பின்னோக்கி செல்லக்கூடாது. எல்லாருக்கும் எல்லாம் தெரியாது. மாணவிகளாகிய நீங்கள் கேள்வி கேட்கும் திறனை வளர்த்து கொள்ள வேண்டும். தினமும் நீங்கள் கேள்விகேட்டு திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். படிப்பது மட்டுமல்லாமல் சமூகத்தில் என்ன நடக்கிறது என்ற சமூக சிந்தனை வேண்டும். பெண்களுக்கான உரிமைகள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
பெண்களுக்கு இந்த சமூகத்தில் என்னென்ன கிடைத்துள்ளது. இன்னும் கிடைக்காதவைகள் குறித்தும் ஆராயுங்கள். மனிதனுக்கு மறக்க கூடிய நிலையும், மறக்காத நிலையும் உள்ளது. எனவே ஒவ்வொரு நாள் பாடத்தையும் அன்றைக்கே படியுங்கள். மருத்துவ துறை தேர்ந்தெடுக்கும் நீங்கள் இந்த சமூகத்துக்கு எதையாவது செய்ய வேண்டும் என்று நினையுங்கள். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளர் வைரமணி பயிற்சி அளித்தார். முடிவில் லட்சுமி மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ஜெயலட்சுமி நன்றி கூறினார்.