பெரம்பலூர் மாவட்டம் லப்பைகுடிக்காட்டில் உள்ள செல்வவிநாயகர் திருகோவிலில் அமைந்துள்ளது. அங்கு ஐயப்ப சுவாமிக்கு 13ம் ஆண்டு மண்டல பூஜை நாளை (17ந்தேதி) சிறப்பாக நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அதிகாலையில் கணபதி ஹோமம், கோமாதா பூஜை, அபிஷேகம், மார்கழி மாத சிறப்பு பூஜைகள் சுப்ரமணி சிவாசாரியர், ராமமூர்த்தி குருக்கள் தலைமையில் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு அருள் பிரசாதம் வழங்கப்பட உள்ளது.
மாலையில் ஐயப்ப சுவாமிக்கு 16 வகை அபிஷேகத்துடன் நெய் அபிஷேகம் தீபாராதனை,1008 அகல் விளக்கு பூஜைகள் நடைபெறுகிறது. சந்திரகாசன் குருசாமி தலைமையில் கன்னி, பூஜை, மண்டல பூஜை, படி பூஜை, அன்னதானமும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை பெரம்பலூர் ஐயப்ப சேவா சங்கம் செய்து உள்ளனர்.