பெரம்பலூர் மாவட்டம், லப்பைக்குடிக்காடு பகுதியில் குன்னம் தொகுதி சட்ட மன்ற தொகுதி வேட்பாளர் ஆர்.டி. இராமச்சந்நதிரன் கட்சி நிர்வாகிகளுடன் வாக்கு சேகரித்தார்.
லப்பைக்குடிக்காடு பேரூராட்சிக்கு உட்பட்ட மேற்கு, தெற்கு தெரு, கிழக்கு தெரு, பிஸ்மில்லா நகர், பிலால்ரலித் தெரு, கிழக்கு மெயின் ரோடு, மேற்கு மெயின் ரோடு, பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் வாக்காளர்களிடம பேசியதாவது; லப்பைக்குடிக்காடு பேரூராட்சி பகுதியில் தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதுடன், கிடப்பில் இருக்கும் பாதாள சாக்கடை, தார் சாலை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். மேலும், 5 ஆண்டுகால அதிமுகவின் சாதனைகளையும், நலத்திட்டங்களையும் எடுத்துரைத்தார்.
அப்போது லப்பைகுடிக்காடு நகர செயலாளர் முகமது பாரூக், அவைத் தலைவர் ஷேக்அலி, லப்பைக்குடிக்காடு பேரூராட்சி தலைவர் சம்சுல் பஜ்ரியா, இணைச் செயலாளர் ரஹமத்துணிஷா, துணைத் தலைவர் சித்திக் பாஷா, பொருளாளர் சலீம் முகமது, பாசறை செயலாளர் முகமது பெரோஸ், 13 வது வார்டு செயலாளர் அன்சாரி, முகமது யூனூஸ், மணிமுகமது, 1 வது வார்டு அவைத் தலைவர் மணிமுகமது, மாவட்ட பிரதிநிதி மும்தாஜ்பேகம், மற்றும் பேரூர் கழக நிர்வாகிகள் ஜாகீர்உஷேன், கிளை செயலாளர் ஹக்கீம் பாஷா, மற்றும் ஜரீன் பேகம், ஷையத் துணிஷா, ஜபருத்கனி, அமுதா, மதுரம் முத்துசாமி, உட்பட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
முன்னதாக குன்னம் தொகுதி வேட்பாளர் ஆர்.டி.இராமச்சந்திரன், முஸ்லீம் மற்றும் இந்து முக்கிய பிரமுகர்களையும் வேட்பாளர் சந்தித்து தனக்கு ஆதரவளித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டார்.