பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே உள்ள விசுவக்குடி கிராமத்தை சேர்ந்தவர் காதர்பாஷா மகன் மன்சூர்அலி (31) இவர் இன்று காலை பெரம்பலூரில் தனது இரு சக்கர வாகனத்தில் அரசு மருத்து மனை அருகே உள்ள ஆலம்பாடி பிரிவு சாலையில் சென்றுக்கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியே வந்த லாரி மீது டூவீலர் அதிவேகமாக மோதியது. இதில் மன்சூர்அலி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து லாரி டிரைவர் காஞ்சிபுரத்தை சேர்ந்த கண்ணன்,37, என்பவர் கொடுத்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.