பெரம்பலூர் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், தெம்மாவூர் அருகேயுள்ள பாலையூர் கிராமத்தை சேர்ந்தவர் பவுன்ராஜ் மகன் ராஜீவ்காந்தி(30). அதே பகுதியை சேர்ந்த, அவரது நண்பர் பழனிவேல் (40) இருவரும், அரியலூரிலிருந்து பெரம்பலூருக்கு பைக்கில் இன்று மாலை வந்துக் கொண்டிருந்தனர்.
பெரம்பலூர் அருகே உள்ள கவுள்பாளையம் பகுதியில் வந்தபோது, முன்னே சென்றுகொண்டிருந்த டேங்கர் லாரியை முந்த முயன்றனர். அப்போது, லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் பலத்த காயமடைந்த பழனிவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், பலத்த காயமடைந்த ராஜீவ்காந்தி பெரம்பலூர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து, விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் வட்டம், நெடுமானூரை சேர்ந்த லாரி ஓட்டுநர் அண்ணாதுரையை (51) கைது செய்து, பெரம்பலூர் காவல் நிலையத்தினர் வழக்குப்திவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.