பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் கணவன், மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே இன்று உயிரிழந்தனர்.
பெரம்பலூர் அருகேயுள்ள செஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (52) விவசாயி. இவர், தனது மனைவி விஜயாவுடன் (43), பெரம்பலூர் அருகேயுள்ள சிறுகுடல் கிராமத்தில் நிகழ்ந்த துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, பெரம்பலூர்- துறையூர் சாலையில், செஞ்சேரி காலனி அருகே சென்றபோது, துறையூரிலிருந்து பெரம்பலூர் நோக்கி வந்த டேங்கர் லாரி மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.
இதில், நிலைதடுமாறி கீழே விழுந்ததில் லாரியின் சக்கரம் அவர்களது உடல் மீது ஏறியது. சம்பவ இடத்திலேயே செல்வராஜீம், அவரது மனைவி விஜயாவும் உயிரிழந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அவர்களது உடலை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவ மனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்த புகாரின்பேரில், பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து தப்பியோடிய லாரி ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர்.