பெரம்பலூர்:பெரம்பலூர் மாவட்டத்தில் வக்கீல்கள் சங்கத்தினர் 350க்கும் மேற்பட்டோர் நாளை முதல் (17.06.15) கோர்ட் புறக்கணிப்பு போராட்டத்தில்
ஈடுபடுகின்றனர்.
பெரம்பலூர் மாவட்ட வக்கீல்கள் சங்கத்தின் நிர்வாக்குழுவின் அவசர கூட்டம்
இன்று நடைபெற்றது.
மாவட்ட தலைவர் வள்ளுவன்நம்பி தலைமை வகித்தார். பொருளாளர் சீனிவாசன், இணைச்செயலாளர் இளங்கோவன் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், பெரம்பலூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தை சேர்ந்த
வழக்கறிஞர்கள் தேவராஜன் மீது நிலப்பிரச்சினை தொடர்பாகவும், இளங்கோவன்,
அண்ணாதுரை ஆகியோர் மீது பெண் காவலரிடம் தகராறு செய்ததாகவும், பொய் வழக்கு
போட்டுள்ள பெரம்பலூர் காவல் நிலைய போலீசாரை கண்டித்தும்,
வழக்கறிஞர்களை
காவல் நிலையத்தில் வைத்து தரக்குறைவாக தகாத வார்த்தையில் பேசி, அவர்களை
தாக்கி கொடுமைபடுத்திய போலீசார் மீது வழக்கு பதிவு செய்து, உரிய விசாரணை
நடத்திட வேண்டும் என வலியுறுத்தியும் இன்று 17ந்தேதி முதல் பெரம்பலூர்
மாவட்டத்திலுள்ள வக்கீல்கள் காலவரையற்ற கோர்ட் புறக்கணிப்பு
போராட்டத்தில் ஈடுபடுவதென முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் நிர்வாக்குழு உறுப்பினர்கள் குமாரசாமி, அண்ணாதுரை, பெரியசாமி
உள்பட பலர் பங்கேற்றனர்.
முன்னதாக துணைத்தலைவர் ராதாகிருஷ்ணமூர்த்தி
வரவேற்று பேசினார்.
முடிவில் செயலாளர் சுந்தர்ராஜன் நன்றி கூறினார்.