வங்கயில் கொள்ளை முயற்சி! அலாரம் ஒலித்ததால் திருடர்கள் தப்பி ஓட்டம். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நகை பணம் தப்பியது.
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அருகே உள்ள வஸ்சிட்டபுரம் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு செயல்பட்டு வருகிறது. இந்த வந்து வங்கியில் மேட்டுகாளிங்கராயநல்லூர், பள்ளகாளிங்கராயநல்லூர், வசிஸ்ட்டபுரம் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் இந்த வங்கியில் உறுப்பினராகவும், சேமிப்பு கணக்குகளும் வைத்துள்ளனர். இவர்கள், வேளாண் கடன், வணிக கடன், நகைக் கடன், உள்ளிட்ட பல்வேறு வித பரிவர்த்தனைகள் அவ்வங்கி கிளையில் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவில் மர்ம மனிதர்கள் வங்கியின் பூட்டை உடைத்து உள்ளே சென்று வங்கியில் கொள்ளையடிக்க முயன்றனர். அப்போது வங்கியின் உள்ளே பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கருவி அபாயமணி ஒலித்தது. அதை கேட்ட திருடர்கள் தப்பி ஓட்டம் எடுத்தனர். அப்பகுதி மக்களும் உடனே விழித்து எழுந்து வங்கி அருகில் பார்த்த போது வங்கியில் கொள்ளையர்கள் கொள்ளையடிக்க திட்ட மிட்டு முயற்சித்தது தெரியவந்தது. உடனே குன்னம் காவல் நிலையத்திருனக்கு தகவல் தெரிவித்தன் பேரில் அவர்கள் விரைந்து வந்து தடயங்களை சேகரித்து கொள்ளையர்களை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வங்கி ஊழியர்கள் வந்து பார்த்த போது வங்கியின் கோடிக்கணக்கான மதிப்புள்ள நகை பணம் தப்பியது என தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.