பெரம்பலூர்: வரும் சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க., வெற்றி பெற்று மீண்டும் ஜெயலலிதா முதல்வர் ஆவார் என பெரம்பலூரில் நடந்த மாவட்ட அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் வைத்திலிங்கம் கூறினார்.
பெரம்பலூரில் நடந்த மாவட்ட அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டத்துக்கு மாவட்ட அவைத்தலைவர் துரை தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் பூவைசெழியன், ஒன்றிய செயலாளர்கள் கர்ணன், கிருஷ்ணசாமி, சிவப்பிரகாசம், பேரூர் செயலாளர்கள் செல்வராஜ், முகமதுபாரூக், ரெங்கராஜ், வினோத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், எம்.பி.,க்கள் மருதராஜா, சந்திரகாசி, எம்.எல்.ஏ., தமிழ்ச்செல்வன், முன்னாள் துணை சபாநாயகர் அருணாசலம், முன்னாள் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் உட்பட பலர் பேசினர்.
கூட்டத்தில் வீட்டுவசதி, நகர்புற வளர்ச்சி துறை மற்றும் வேளாண் துறை அமைச்சர் வைத்திலிங்கம் பேசுகையில், புதிய பொறுப்பாளர்களுக்கு கட்சியினர் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஜெயலலிதா கட்டளையை நீங்கள் நிறைவேற்ற வேண்டும். அ.தி.மு.க., துவங்கிய காலத்தில் 17 லட்சம் உறுப்பினர்களை கொண்டிருந்தது.
ஆனால் தற்போது ஒன்றரை கோடி உறுப்பினர்களை கொண்டுள்ளது. மற்ற கட்சி தலைவர்கள் தன் குடும்பத்தினரை முன்னேற்றுவதற்காக செயல்படுகின்றனர். ஆனால் முதல்வர் ஜெயலலிதா தமிழக மக்களுக்காக தனது வாழ்க்கையையே அர்ப்பணித்துள்ளார். உலக பணக்காரர்கள் பட்டியலில் தி.மு.க.,வை சேர்ந்தவர்கள் உள்ளனர்.
தாலிக்கும் தங்கம், மிக்ஸி, கிரைண்டர், பேன், பசுமை வீடு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை ஏழை மக்களுக்காக ஜெயலலிதா செயல்படுத்தி வருகிறார்.
இத்திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்த்து அ.தி.மு.க.,வுக்கு வாக்கு வங்கியாக மாற்ற வேண்டும். அ.தி.மு.க., கட்சியினரின் ஒரே சிந்தனை, ஒரே பார்வை தி.மு.க.,வை வீழ்த்துவதில்தான் இருக்க வேண்டும். அதுவே நமது லட்சியம். கடமையாகும். வரும் சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க., வெற்றி பெற்று மீண்டும் ஜெயலலிதா முதல்வர் ஆவார். ஜெயலலிதாவின் தொலைநோக்கு பார்வையில் உருவான திட்டம் விஷன் 20–20 செயல்படுத்தும்போது தமிழகத்தில் ஏழை வர்க்கமே இல்லை என்ற நிலை உருவாகும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் பாமக, திமுக, தேமுதிக, விசிக ஆகிய கட்சிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் அமைச்சர் வைத்திலிங்கம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
இதில் மாவட்ட ஊராட்சி தலைவர் சகுந்தலா, துணை தலைவர் சேகர், நகராட்சி தலைவர் ரமேஷ், யூனியன் சேர்மன் ஜெயக்குமார், மாவட்ட அணி செயலாளர்கள் ராஜாராம், ராஜேஸ்வரி, கார்த்திக்கேயன், செல்வகுமார், வக்கீல் குலோத்துங்கன், சங்கு சரவணன், மாவட்ட இலக்கிய அணி துணை செயலாளர் ரவிச்சந்திரன், பெரம்பலுõர் ஒன்றிய பொருளாளர் வெங்கடசாமி, ஆலத்தூர் ஒன்றிய எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் பிச்சை, ஊராட்சி தலைவர்கள் வேல்முருகன், ஜெகதீஷ், குதரத்துல்லா, கோனேரிபாளையம் மனோகரன், அண்ணாதுரை, கள்ளப்பட்டி ஆனந்தன், வி.களத்தூர் செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட இணை செயலாளர் ராணி வரவேற்றார். மாவட்ட துணை செயலாளர் கௌரி நன்றி கூறினார்.