தமிழக முதலமைச்சரால் 15.09.2011 அன்று தமிழகத்தில் வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள பெண்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் உயரிய நோக்கத்தில் தொடங்கப்பட்ட விலையில்லா கறவை பசுக்கள் மற்றும் வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டத்தின் மூலம் ஒரு பயனாளிகளுக்கு 4 வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் வீதம், 31 மாவட்டங்களில 5 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகளுக்கு, 22 லட்சம் வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள், தமிழகத்தில் மீண்டும் ஒரு வெண்மை புரட்சியை உருவாக்கும் வகையில், 21 மாவட்டங்களில், 48 ஆயிரம் பயனாளிகளுக்கு 48 ஆயுிரம் கறவை பசுக்களும் 2011-12 முதல் 2014-15 வரை வழங்கப்பட்டுள்ளது. மேலும் 2015-16 ஆம் ஆண்டிலும் கால்நடைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழக முதலமைச்சரின் விலையில்லா வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டம் முழுமையாக செயல்படுத்தி முடிக்கப்பட்டுள்ளது இத்திட்டத்தின்கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் 2011-12 முதல் 2015-16 முடிய 7,903 பயனாளிகளுக்கு 31,612 ஆடுகள் வாங்கி வழங்கப்பட்டுள்ளது.
விலையில்லா கறவை பசுக்கள் மற்றும் வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டங்கள் மூலம் பயன்பெறும் பயனாளிகள் தங்கள் கால்நடைகளை கொள்முதல் செய்த பிறகு நன்கு பராமரிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்கள். பயனாளிகளை ஊக்கப்படுத்தும் பொருட்டு, 2011-12 மற்றும் 2012-13ல் கால்நடைகளை சிறப்பாக பராமரித்த பயனாளிகளுக்கு மேற்படி ஆண்டுகளின் தமிழ் புத்தாண்டு தினத்தில் பரிசுகளும் வழங்கப்பட்டுள்ளன.
விலையில்லா கறவை பசுக்கள் மற்றும் வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டங்கள் மூலம் வழங்கப்பட்ட கறவை பசுக்களின் பால் உற்பத்தித் திறனை பெருக்கவும், வெள்ளாடுகள், செம்மறி ஆடுகளின் எடையினை அதிகரிக்கவும், தமிழகம் முழுவதும், 26.12.2015 மற்றும் 27.12.2015 ஆகிய நாட்களில் கறவைப் பசுக்களுக்கு, இனப்பெருக்க மருத்துவ பரிசோதனையும், வெள்ளாடு, செம்மறி ஆடுகளுக்கு குடற்புழு நீக்க முகாமும் நடைபெற உள்ளது.
விலையில்லா கறவை பசுக்கள் மற்றும் வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டங்களின் மூலம் பயன்பெற்ற பயனாளிகள் மட்டும் அல்லாமல் அனைத்து விவசாயிகளும், இதர பொதுமக்களும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இது தொடர்பாக மேலும் விபரங்களுக்கு கால்நடை பராமரிப்புத்துறை துணை இயக்குநரை 9442151611 என்ற அலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம், என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.