பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் “மக்களுக்காக மக்கள் பணி” சிறப்பாக நடத்துவது குறித்து அக்கட்சியின் மாவட்ட ஒன்றிய, பேரூர், கிளைக் கழகங்களின் மகளிர் அணி செயல்வீரர்கள் கூட்டம், இன்று, பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் அத்தியூர். மா.கணபதி தலைமை வகித்தார். பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் வாசு.ரவி வரவேற்றார்.
மாவட்ட கழக பொருளாளர் சீனி.வெங்கடேசன், மாவட்ட துணை செயலாளர்கள் ஆர்.கண்ணுசாமி, கே.எஸ்.சிவக்குமார், கரு.சுடர்செல்வன், ஒன்றிய செயலாளர்கள் துரை.சிவா.ஐயப்பன் (வேப்பந்தட்டை), பொன்.சாமிதுரை(ஆலத்தூர்), சி.மலர்மன்னன் (வேப்பூர்) ஆகியோர் முன்னிலை வகிகத்தனர்.
மாநில மகளிர் அணி செயலார் சிவகாமி முத்துக்குமார், மாவட்ட செயலாளர் துரை.காமாராஜ் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.
கூட்டத்தில்…
பெரம்பலூர் மாவட்டம் வேப்பூருக்கு “மக்களுக்காக மக்கள் பணி” விழாவிற்காக நவ.17 ஆம் தேதி வருகை தரும் தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்திற்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது,
தேமுதிகவின் ஒவ்வொரு கிளையில் இருந்தும் சுமார் 50 பேர் வாகனத்தில் வந்து கலந்து கொள்வது, மற்றும் மகளிர் அணியினரை பாதுகாப்பாக அழைத்து வருவது குறித்தும்,
பெரம்பலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் உழவர்கள் வெட்டி அனுப்பிய கரும்பிற்கான நிலுலைத் தொகையினை அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் தேசிய முற்போக்கு தொழிற்சங்கத்தின் உறுப்பபினர்களை பழிவாங்கும் போக்கை இந்த அரசு கைவிட வேண்டும்,
மாவட்டத்தில் பெண்களுக்கு அதிக அளவு வேலை வாய்ப்பை வழங்கக்கூடிய ஜவுளி பூங்கா நிறுவனத்தை விரைந்து துவங்க வேண்டும் என்றும்,
மாவட்டத்தில் பெண் குழந்தைகள், மற்றும் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்க அரசு சிறப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,
மழைக்காலம் துவங்கி உள்ள நிலையில் தொற்று நோய்கள் பரவாதவாறு மாவட்ட சுகாதாரத் துறை அனைத்து கிராமங்களிலும், முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் மகிளர் அணியைச் சேர்ந்த பொறுப்பாளர்கள், மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வெ.செல்லப்பிள்ளை, ஆர் ரெங்கராஜ் பொதுக்குழ உறுப்பினர்கள் பி.இரவிக்குமார், எஸ்.அழகுதுரை, பி.மனோகரன், எஸ்.விஜயகுமார், வேப்பந்தட்டை பொருளாளர் சதீஸ் மாவட்டம், ஒன்றியம், பேரூர், கிளைக்கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் நகர செயலாளர் சி.ஜெயக்குமார் நன்றி கூறினார்.