தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடைபெறவுள்ள தொகுதி-1 க்கான அனைத்து முன் ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன – மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 08.11.2015 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 10.00 மணிமுதல் 1.00 மணி வரை நடைபெறவுள்ள தொகுதி-1 க்கான முதனிலைத் தேர்விற்கு 4 மையங்கள் தெரிவுச் செய்யப்பட்டு, மொத்தம் 2569 நபர்கள் தேர்வு எழுத உள்ளனர்.
பெரம்பலூர் நகரில் துறையூர் சாலையில் அமைந்துள்ள தனலட்சுமி சீனிவாசன் கல்லூரிகளில் 1669 நபர்களும், குரும்பலூர் பாரதிதாசன் பல்கலை கழக உறுப்புக் கல்லூரியில் 300 நபர்களும், கீழக்கணவாய் அரசினர் தொழில்நுட்பக்கல்லூரியில் 600 நபர்களும், தேர்வு எழுத உள்ளனர்.
இத்தேர்வுக்கு 9 முதன்மை கண்காணிப்பாளர், 3 பறக்கும் படை, 3 நடமாடும் குழு மற்றும் 9 அறை ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் நியாமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு நடைபெறும் அனைத்து மையங்களுக்கும் சிறப்பு பேருந்து வசதி மற்றும் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன, என தெரிவித்துள்ளார்.