பெரம்பலூர் மாவட்டத்தில் 21 அம்ச கோரிக்களை நிறைவேற்றக்கோரி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
புதிய பென்சன் திட்டத்தை ரத்துசெய்யவேண்டும், வருவாய்த்துறை ஊழியர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்கவேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும், தற்காலிகபணியாளர்களை பணிநிரந்தரம் செய்யவேண்டும் என்பது உட்பட 21 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றவேண்டுமென தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இதையடுத்து அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில்ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட வருவாய்த்துறை அலுவலர்களுக்கான மசால்ஜி பணியிடங்களுக்கான அரசாணையும், வருவாய்த்துறையின் மானிய கோரிக்கையில் முதல்வர் ஒப்புதலுடன் அறிவித்த பெயர் மாற்றத்திற்கான அரசாணையை உடனே வெளியிட வலியுறுத்தியும்,
கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரியும் 2ம்தேதி மற்றும் 3ம்தேதி ஆகிய 2 நாட்கள் 48 மணிநேர வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுப்பட வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் முடிவு செய்தனர்.
இதன்படி இன்று பெரம்பலூர் மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் வேலைநிறுத்தப்பபோராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதில் தாசில்தார், துணைதாசில்தார், ஆர்.ஐ., இளநிலைஉதவியாளர், உதவியாளர், பதிவறை எழுத்தர்,அலுவலக உதவியாளர்கள் 100 பேர் கலந்து கொண்டனர்.
இந்த வேலைநிறுத்தத்தால் கலெக்டர் அலுவலம், சப்-கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம் ஆகியவற்றில் அலுவலர்கள் இல்லாததால் அலுவலகங்கள் வெறிச்சோடிகிடந்தது. இதனால் அலுவலகப்பணிகள் பாதிக்கப்பட்டது. மேலும் பொதுமக்களும் சான்றிதழ்கள், பட்டா போன்றவை பெறமுடியாமல் தவிர்த்தனர். இந்த போராட்டம் நாளையும் நடைபெறுகிறது.