பெரம்பலூர் மாவட்டத்தில் வருவாய் மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கிடையே அறிவியல் கண்காட்சி வரும் நவ.17, பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளது. இக்கண்காட்சியினை சிறப்பாக நடத்த தேவையான முன்னேற்பாட்டு பணிகளை மேற்கொள்வது தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாவட்ட கல்வி அலுவலர் வெங்கடாசலபதி தலைமையில் இன்று பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வருவாய் மாவட்ட அளவிலான கண்காட்சியில் 167 பள்ளிகள் கலந்துகொள்ள உள்ளதாகவும், கண்காட்சியில் வைக்க வேண்டிய காட்சி பொருட்கள் குறித்த முன்பதிவு நவ.16, அன்று செய்யப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. மேலும் கண்காட்சி சிறப்பான முறையில் நடக்க அனைவரும் முழுஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும், அவரவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை முழு ஈடுபாட்டோடு செய்து முடிக்க வேண்டுமென்றும் மாவட்ட கல்வி அலுவலர் வரவேற்புக்குழு, அறிவியல் படைப்பு காட்சி முன்பதிவு குழு, ஒழுங்குக்கட்டுப்பாட்டுக்குழு மற்றும் உணவுக்குழுவில் இடம் பெற்றிருந்த தலைமையாசிரியர்களிடம் அறிவுறுத்தினார். தலைமையாசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர்.