பெரம்பலூர் : அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரும் பங்குப்பெற, மாவட்ட ஆட்சியர் தரேஸ்அஹமது வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணையின் படி பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் தொடர் திருத்தப்பணியின் போது பெறப்பட்ட வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், செய்தல் முதலிய படிவங்கள், வரைவு வாக்காளர் பட்டியல் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் செப்.15 அன்று காலை 10.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில், வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் பெரம்பலூர் சார் ஆட்சியரால் வெளியிடப்பட உள்ளது. மேற்படி நிகழ்ச்சியில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.