பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே, காவல் துறையை கண்டித்து வழக்குரைஞர்கள் 2- வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.
பெரம்பலூர் மாவட்ட வழக்குரைஞர்கள் சங்கத்தை சேர்ந்த வழக்குரைஞர்கள் தேவராஜன் மீது நிலப்பிரச்னை தொடர்பாகவும், இளங்கோவன், அண்ணாதுரை ஆகியோர் மீது பெரம்பலூர் போலீஸார் பொய் வழக்கு பதிவு செய்ததை கண்டித்தும் வழக்குரைஞர்கள் சங்கத்தினர் கடந்த 17 ஆம் தேதி முதல் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே 2-வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள காந்திசிலை எதிரே வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நாளை புதன்கிழமை (ஜூன் 24) நடத்த உள்ளனர்.