தூத்துக்குடியில் கலவரத்தை தூண்டியதாக கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் வாஞ்சிநாதனின் வீடு மற்றும் அலுவலகத்தை சோதனை செய்யும் பணியில் தூத்துக்குடி காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இப்போராட்டம் குறித்து வழக்கு பதியப்பட்டது. இந்நிலையில் மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் வாஞ்சிநாதனை தூத்துக்குடி காவல்துறையினர் கைது செய்து, பாளையங்கோட்டை சிறையில் அடைத்துள்ள நிலையில், தூத்துக்குடி நீதிமன்ற ஆணையின் படி தூத்துக்குடி காவல்துறையினர் 30 க்கும் மேற்பட்டவர்கள் மதுரை கே.கே நகரில் உள்ள வாஞ்சிநாதன் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இச்சோதனையின் போராட்டத்திற்கு பயன்படுத்திய கொடி, பேனர்கள், டீ சர்ட், துண்டறிக்கைகள் உள்ளிட்ட ஆவணங்கள் உள்ளதா என்கிற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர்.