பெரம்பலூர் : பெரம்பலூரில் பொறியியல் கல்லூரி மாணவனிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
தெலுங்கான மாநிலம், அபிஹூடோ பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் மகன் விஷால் (24). இவர், பெரம்பலூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ மூன்றாமாண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று மாலை பெரம்பலூர் தோமினிக் பள்ளி அருகே நடந்து சென்றுகொண்டிருந்த விஷாலிடம், பெரம்பலூரை சேர்ந்த 4 பேர் கத்தியை காட்டி மிரட்டி, அவரிடமிருந்த ரூ. 19 ஆயிரத்தை பறித்துக்கொண்டு தப்பினர்.
இதுகுறித்து விஷால் அளித்த புகாரின்பேரில், பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிந்து மேற்கொண்ட விசாரணையில் பெரம்பலூர் சங்குபேட்டையை சேர்ந்த ரெங்கசாமி மகன் ராஜா (24), கலியமூர்த்தி மகன் செங்குட்டுவேல் (24), பன்னீர்செல்வம் மகன் சதீஸ்குமார் (21), ஆலம்பாடி சாலையை சேர்ந்த சர்தார் மகன் சதாம் உசேன் ஆகியோர் 4 பேரும் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து ராஜா, செங்குட்டுவேல் ஆகியோரை இன்று கைது செய்த போலீஸார், தலைமறைவாக உள்ள 2 பேரை மேலும் தீவிரமாக தேடி வருகின்றனர்.