பெரம்பலூர்: பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் அறிவழகன் தலைமையில் வாகனங்களை பாதுகாப்பாக இயக்குவது குறித்து அறிவுரை கூட்டம் நடத்தினார்.
கூட்டத்தில் பள்ளி வாகனங்கள் நல்ல முறையில் பராமரித்து இயக்கப்பட வேண்டும். வாகனத்தில் அளவுக்கு அதிகமாக மாணவ மாணவியர்களை ஏற்ற கூடாது. வாகனத்தை பாதுகாப்பான வேகத்தில் இயக்கவேண்டும். வாகனத்தில் வரும் மாணவர்களை தங்கள் வீட்டு பிள்ளைகளாக பாவித்து வாகனத்தை பாதுகாப்பாக இயக்கவேணடும்.
5 வருட அனுபவம் பெற்றவர்களை மட்டுமே பள்ளி வாகனத்தை இயக்க பணிக்கு அமர்த்த வேண்டும். வாகனத்தில் கண்டிப்பாக உதவியாளர் ஒருவர் இருக்க வேண்டும்.
வாகனத்தில் மாணவர்களை இறங்கும் போதும் மற்றும் ஏறும் போதும் பெற்றோரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்க வேண்டும் என வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர் அறிவுரை வழங்கினர்.
மேலும், மோட்டார் வாகன சட்டத்திற்கு புறம்பாக இயக்கப்படும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
கூட்டத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பாபு, பெரியசாமி, தனலட்சுமி பள்ளி வாகன ஓட்டுநர்கள் மற்றும் மேலாளர்கள் கலந்து கொண்டனர்.