பெரம்பலூர்: பெரம்பலூரில் இன்று பள்ளி வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் வருவாய்த் துறையினர் இணைந்து பள்ளி வாகனங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
இன்று மாலை புதிய மதனகோபாலபுரம் பகுதியில் பள்ளிகளில் இருந்து வரும் வாகனங்களில் 5 வருடம் அனுபவம் உள்ள ஓட்டுநர் வாகனத்தை இயக்குகிறாரா , வாகனத்தில் அளவுக்கு அதிகமான பள்ளி மாணவியர்கள் ஏற்றுப்பட்டு உள்ளனரா, முதலுதவிப் பெட்டி உள்ளனவா என்பது உள்ளிட்ட பல்வேறு சோதனைகளை 68 பள்ளி வாகனங்களில் மேற்கொண்டனர்.
அதில் குறைபாடு உள்ள 15 வாகனங்களுக்கு ரூ: 52 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த ஆய்வின் போது வட்டார போக்குவரத்து அலுவலர் அறிவழகன், பெரம்பலூர் வருவாய் வட்டாச்சியர் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பாபு, பெரியசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.
அப்போது அதிக மாணவர்களை ஏற்றி கொண்டு வந்த தனியார் பள்ளிப் பேருந்து வாகன தணிக்கைக்கு நிற்காமல் சென்றது. அப்போது அந்த பேருந்தை போக்குவரத்து அலுவலர்கள் விரட்டி பிடித்தனர். பின்னர் ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு,ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தார்.