marathonவாக்காளர் தினம் மற்றும் பெண்குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர;வை மக்களிடையே ஏற்படுத்த மாராத்தான் ஓட்டம் நடத்தப்படவுள்ளது.

இதுதொடர்பாக மேற்கொள்ளப்படவேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் குறித்த கூட்டம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:

தாய்த் திருநாட்டின் குடிமக்களாய் இருக்கும் நாம் அனைவரும் நமது ஜனநாயகக் கடமையினை ஆற்ற வேண்டும், 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை வலிறுத்தும் வகையிலும், பெண்குழந்தைகள் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாராத்தான் ஓட்டம் வரும் ஜன.24 ( ஞாயிறு) அதிகாலை 5 மணிக்கு நடத்தப்படவுள்ளது.

இந்த தொடர் ஓட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக முகப்பில் இருந்து துவங்கி, குரும்பலூர் பாளையம் வரை செல்லும். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் கலந்து கொள்ளும் வகையில் 21.1 கி.மீட்டர் தூர ஓட்டம் மற்றும் 10 கி.மீட்டர் தூர ஓட்டம் என 2 பிரிவாக மாரத்தான் ஓட்டம் நடத்தப்பட உள்ளது.

இந்த இரண்டு ஓட்டங்களிலும் தனித்தனியே முதலாவதாக வரும் ஆண், பெண் இருபாலருக்கும் முதல் பரிசாக தலா ரூ.10 ஆயிரம் வீதம், இரண்டு ஓட்டங்களுக்கும் சேர்த்து 4 நபர்களுக்கு மொத்தம் ரூ.40 ஆயிரம், இரண்டாம் பரிசாக தலா ரூ.5 ஆயிரம் வீதம்; இரண்டு ஓட்டங்களுக்கும் சேர்த்து 4 நபர்களுக்கு மொத்தம் ரூ.20,000 மும் வழங்கப்பட உள்ளது.

மேலும் மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்கள் பெயரை www.perambalurmarathon.in என்ற இணைய தள முகவரியிலோ, மாவட்ட விளையாட்டு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாகவோ சனிக்கிழமை 22.1.2016 வரை பதிவு செய்து கொள்ளலாம்.

21.1 கி.மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்பவர்கள் மாரத்தான் ஓட்ட நாளான 24.1.2015 அன்று அதிகாலை 5 மணியளவிலும், 10 கி.மீட்டர் ஓட்டத்தில் கலந்து கொள்பவர்கள் 5.30 மணியளவிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலக முகப்பிற்கு தவறாது வந்து விட வேண்டும்.

இந்த தொடர; ஓட்டத்தில் கலந்துகொள்ள பதிவு செய்பவர்கள் பதிவுக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். இதுகுறித்து மேலும் விபரங்களுக்கு 9788532233, 7373003579 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம்.

மாரத்தான் ஓட்டங்களில் பங்கு கொள்ளும் அனைவருக்கும் ஒரு டி – சர்ட் வழங்கப்படும். இந்த மாராத்தான் ஓட்டங்களை குறித்த நேரத்தில் வெற்றிகரமாக முடிக்கும் வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கங்களும், மாரத்தான் ஓட்டத்தினை வெற்றிகரமாக முடித்தவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்படும், என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!