Extension of timeout to check voter list; Perambalur Collector V. Santha
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா விடுத்துள்ள தகவல்:
இந்திய தேர்தல் ஆணையம் 01.01.2020- தகுதி நாளாக கொண்டு வாக்காளர் சிறப்பு சுருக்கத் திருத்தம் மேற்கொள்ள ஆணையிட்டுள்ளது. அதன்படி வாக்காளர் பட்டியலின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் நோக்கத்துடனும் மற்றும் தகுதியுள்ள நபர்கள் அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் நோக்கத்துடனும் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புத் திட்டத்தை செப்டம்பர் – 1 ஆம் தேதி முதல் அக்டோபா் 15 ஆம் தேதி வரை வாக்காளா்கள் தங்கள் விவரங்களை சரிபார்த்துக்கொள்ளலாம் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. ஆனால் தற்போது வாக்காளா் சரிபார்ப்பு திட்டத்தினை நவம்பா் 18 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. மேலும் வரைவு வாக்காளா் பட்டியலானது நவம்பா் 25 ஆம் தேதியன்று வெளியி்டப்படும் என அறிவி்த்துள்ளது.
இந்த திட்டத்தின் மூலமாக, வாக்காளர்கள் தங்களது பெயர், முகவரி, புகைப்படம், பிறந்த தேதி, ஆகிய விவரங்களை வாக்காளர்களே திருத்தம் செய்ய வாய்ப்பு அளிக்கப்படுகிறது. கீழ்காணும் வழிமுறைகளி்ல் ஏதேனும் ஒன்றை பின்பற்றி வாக்காளர்கள் தங்கள் விபரங்களை வாக்காளர் பட்டியலில் சரிபார்த்துக் கொள்ளலாம்.
1. வாக்காளர் உதவி மையம் 1950 (மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள்)
2. கைபேசி செயலி ( Voter help line Mobile App)
3. தேசிய வாக்காளர் இணையதள சேவை (NVSP.in)
4. பொது சேவை மையம் (CSC)
5. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் சமர்ப்பித்து வாக்காளர் பதிவு அலுவலரிடம் தங்கள் விபரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள இணையதளம் அல்லது செயலியில் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை உள்ளீடு செய்து திருத்தங்களைச் செய்து கொள்ளலாம். இவ்வகையான திருத்தங்களுக்கு ஆதாரமாக கடவுச்சீட்டு, வாகன ஓட்டுநர் உரிமம், ஆதார், ரேஷன் அட்டை, நிரந்தர கணக்கு எண், வங்கிக் கணக்கு புத்தகம், விவசாய அடையாள அட்டை மற்றும் சமீபத்தில் பெறப்பட்ட குடிநீர் இணைப்பு ரசீது, மின்கட்டண ரசீது, எரிவாயு இணைப்பு ரசீது ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலை பதிவேற்றலாம்.
இணையம் அல்லது செயலியில் செய்யப்படும் திருத்தங்கள் தொடர்பாக வாக்குச்சாவடி நிலையிலான அலுவலர்கள் நேரில் கள ஆய்வு செய்து திருத்தங்களை உறுதிப்படுத்துவர். அதன்பின்பு வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் செய்யப்படும். இந்தத் திட்டம் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் நவம்பா் 18-ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும்.
வாக்காளர் தங்கள் பகுதியில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்கள் மூலமாகவும் வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம்.
மேலும், வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் உள்ள தங்கள் விவரங்களை சரிபார்த்துக் கொள்ள ஏதுவாக வாக்காளர் பதிவு அலுவலர் / வருவாய் கோட்டாட்சியர் பெரம்பலூர் அவர்களின் அலுவலகத்தில் 01.09.2019 முதல் வாக்காளர் சேவை மையம் செயல்பட்டு வருகிறது.
தற்பொழுது, வாக்காளர் வரைவுப் பட்டியலானது வரும் நவம்பா் 25 – ஆம் தேதி வெளியிடப்படும். இந்தப் பட்டியலில் உள்ள திருத்தங்கள், ஆட்சேபனைகளை நவம்பர் 25 -ஆம் தேதி முதல் டிசம்பா் 24 ஆம் தேதிக்குள் வாக்காளர்கள் தெரிவிக்கலாம். அதில் ஏதேனும் குறைகள் இருந்தால் திருத்தம் செய்யவும் வாய்ப்பு அளிக்கப்படும்.
முழுமையாக திருத்தம் செய்யப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலானது வரும் ஜனவரி மாதம் 20 ஆம் வெளியிடப்படும்.
கீழ்கண்ட தேதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நடைபெறும். தேதிகளும் மேற்கொள்ளப்படும் பணிகளும்:
வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புத் திட்டம் 18.11.2019 (திங்கள்) வரை, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு 25.11.2019 (திங்கள்), கோரிக்கைகள், மறுப்புகள் பெறும் கால அவகாசம் 25.11.2019 முதல் 24.12.2019 வரை, கோரிக்கைகள் மற்றும் மறுப்புகள் அகற்றுவது 10.01.2020 (வெள்ளி) வரை, துணை வாக்காளா் பட்டியல் தயார் செய்தல் 17.01.2020 (வெள்ளி), இறுதி வாக்காளா் பட்டியல் 20.01.2020 (திங்கள்) அன்று வெளியிடப்படும் என தெரிவித்தள்ளார்.