நாரணமங்கலம் அரசு துவக்கபள்ளியில் நடைபெற்ற வாக்காள பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப்பணியினை மாவட்ட ஆட்சியர் டாக்டர். தரேஸ்அஹமது நேரில் ஆய்வு
பெரம்பலூர் ; இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி 2016ம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப் பணி 15.09.2015 முதல் 14.10.2015 வரை நடைபெறுகிறது. அது சமயம் 01.01.2016 தேதியன்று தகுதியான நாளாக கொண்டு 18 வயது பூர்த்தியான வாக்காளர்களின் பெயர்களை புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்கம் மற்றும் முகவரி மாற்றம் செய்யவும் விண்ணப்பிக்கலாம்.
அதனை முன்னிட்டு இன்று நாரணமங்கலம் அரசு துவக்கபள்ளயில் நடைபெற்ற சிறப்பு முகாமினை மவட்ட ஆட்சியர் டாக்டர் தரேஸ்அஹமது நேரில் சென்று ஆய்வு செய்தார்.
பின்னர் தெரிவித்தாவது :
வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையில் பிழைகள் ஏற்படுவதை தவிர்க்க www.elections.tn.gov.in/eregistration என்ற இணையதளத்தில் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்தல், நீக்கம் செய்தல், முதலிய கோரிக்கைகளை பதிவு செய்திட இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் இணையதளத்தின் மூலமாக விண்ணப்பங்களை பதிவு செய்திட வேண்டும். இதற்கு விண்ணப்பதாரர்கள் தங்களது வண்ண புகைப்படம் ஒன்றினை கொண்டு வரவேண்டும்.
இணையதளத்தில் பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் பிரிண்ட் எடுத்து சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு விசாரணைக்காக அனுப்பப்படும். இணையதளம் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீட்டிற்கு வந்து விசாரணை செய்வார்கள். அது சமயம் வயதுக்கான ஆதாரம், இருப்பிடத்திற்கான ஆதாரம் ஆகியவற்றின் நகல்களை சமர்ப்பிக்க வேண்டும்.
பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 636 வாக்குச்சாவடி மையங்களிலும் 20.09.2015 மற்றும் 04.10.2015 அன்று ஏற்கனவே நடைபெற்ற சிறப்பு முகாம் மற்றும் இணையதளத்தின் மூலமாக படிவம் 6 ல் -13196 படிவங்களும், படிவம் 7ல் – 706 படிவங்களும் , படிவம் 8ல் – 3354 படிவங்களும் , படிவம் 8எ-ல் – 809 படிவங்களும் மொத்தம் 18 ஆயிரத்து 065 படிவங்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
சிறப்பு முகாம்கள் நடைபெறும் நாட்களை தவிர இதர நாட்களில் (24.10.15 – க்குள்) விண்ணப்பதாரர்கள் தங்கள் பகுதிக்கு அருகிலுள்ள வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் இயங்கும் இ-சேவை மையங்கள், புதுவாழ்வு திட்ட வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் இயங்கும் கணினி மையம் மூலமாகவும் இணையதளத்தில் பதிவு செய்யலாம். இதற்காக கோரிக்கை ஒன்றுக்கு ரூ.10 ம்; பிரிண்ட் எடுக்க ஒரு பக்கத்திற்கு ரூ.3- ம் கட்டணம் செலுத்த வேண்டும். பொது மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு பயன்பெறலாம், என தெரிவித்தார்.