பெரம்பலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் நந்தக்குமார் தெரிவித்து இருப்பதாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் மற்றும் குன்னம் ஆகிய இரண்டு சட்ட மன்றத் தொகுதிகள் உள்ளது.
இரண்டு தொகுதிகளிலும் மொத்தம் 638 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் மாற்றுத்திறனாளிகள் வசிக்கும் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில், அவர்கள் வாக்குச்சாவடிக்குள் சென்று வாக்களிக்க உதவும் வகையில் 93 மையங்களுக்கு சக்கர நாற்காலிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த 93 மையங்களில் பெரம்பலூர் சட்ட மன்றத் தொகுதியில் 59 மையங்களும், குன்னம் சட்ட மன்றத் தொகுதியில் 34 மையங்களும் உள்ளன.
93 மையங்களில் மொத்தம் 296 வாக்குச்சாவடிகள் இருக்கின்றன. இதில் பெரம்பலூர் சட்ட மன்றத் தொகுதியில் 180 வாக்குச் சாவடிகளும், குன்னம் சட்ட மன்றத் தொகுதியில் 116 வாக்குச் சாவடிகளும் அடங்கும்.
இந்த வாக்குச் சாவடி மையங்களில் வாக்களிக்க வரும் மாற்றுத் திறனாளிகளை சக்கர நாற்காலியில் அமரவைத்து அவர்களை வாக்களிக்க அழைத்துச் செல்ல 93 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர், என தெரிவித்துள்ளார்.