பெரம்பலூர்: வேப்பந்தட்டை தாலுகாவிற்குட்பட்ட வாலிகண்டபுரம் கிராமத்திலுள்ள கோனேரி ஆற்றுப்படுகையில் அழகிய வேலை பாடுகளுடன் கூடிய ஒருஅம்மன் சிலை இன்று பொது மக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
வாலிகண்டபுரத்திலிருந்து – பிரம்மதேசம் கிராமத்திற்கு செல்லும் வழியில் மிகவும் பிரசித்தி பெற்ற சுமார் 1000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த வாலிஸ்வரர் கோயில் உள்ளது.
இதற்கு பின் பகுதியில் உள்ள கோனேரி ஆற்றில் செப்பு நாணயங்கள் உள்ளிட்ட ஏரளமான பழங்கால பொருட்களை எடுப்பதற்காக பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த சிலரும், அரியலூர் மாவட்டம் சித்தமல்லி கிராமத்தை சேர்ந்த பொது மக்கள் சிலரும் வாலிகண்டபுரம் பகுதிக்கு வந்து ஆற்றுப்படுகையில் பள்ளம் தோண்டிதேடுதல் பணியில் ஈடுபடுவது வழக்கம்.
அதே போன்று இன்று சிலர் பழங்கால பொருட்களை எடுப்பதற்காக பள்ளம் தோண்டிய போது ஒரு மீட்டர் உயரமுள்ள அழகிய வேலைபாடுகளுடன் கூடிய கற்சிலை ஒன்று கிடைத்துள்ளது.
இதனால் பயந்து போன அவர்கள் பழங்கால பொருட்களை தேடும் பணியை நிறுத்தி விட்டு அங்கிருந்து சென்றதாக தெறிகிறது. இந்நிலையில் அவ்வழியே சென்ற பொது மக்கள் சிலர் கற்சிலையை பார்த்து விட்டு வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அதன் பேரில் வருவாய் துறையினர் கற்சிலையை மீட்டு பாதுகாத்து வருகின்றனர்.