பெரம்பலூர் : குன்னம் வட்டம் பெருமத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சாமிதுரை (50) , இவரும், அவரது மனைவி யசோதா,(48), ஆகிய இருவரும் பெரம்பலூருக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தார்.
இரு சக்கர வாகனம் வாலிகண்டபுரம் கிராமம் அருகே வந்த போது திடீரென நாய் குறுக்கே வந்ததால் சாமிதுரை டூவீலரை பிரேக் பிடித்துள்ளார்.
இதனால் இரு சக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே சரிந்தது. இதில் இருவரும் படுகாயமடைந்தனர். இது குறித்து தகவலறிந்த மங்கலமேடு போலீஸார் விபத்துக்குள்ளானவர்களை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர், மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட யசோதா அங்கு சிகிச்சையின் போது இறந்தார். இது குறித்து மங்கலமேடு இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.