பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள விசுவகுடி அணையில் பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு செய்தார். அப்போது அணையின் நீர்மட்டத்தை படிப்படியாக உயர்த்த ஆலோசணை வழங்கினார்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அன்னமங்கலம் ஊராட்சி விசுவகுடியில் பச்சமலை செம்மலை ஆகியவற்றை இணைத்து விசுவகுடி அணை இந்த ஆண்டு புதிதாக கட்டப்பட்டுள்ளது. 33 அடி உயரம் கொண்ட இந்த அணையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் 23 அடி உயரம் நீர் தேங்கிளது. இந்நிலையில் நேற்று இரவு பச்சைமலை பகுதியில் கனமழை பெய்தது.
கனமழையால் கல்லாற்றின் குறுக்கே கட்டப்பட்ட விசுவக்குடி அணைக் கட்டிற்கு 750கனஅடி தண்ணீர் வந்து சேர்ந்தது. இந்த நீர் வரத்து குறைந்து இன்று மாலை நிலவரப்படி அணைக்கு 400 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் 400 கனஅடி தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. இந்தநீர் வெங்கலம் ஏரிக்கு சென்றனடைகிறது.
இந்நிலையில், விசுவகுடி அணையில் நீர்த் தேங்கியுள்ளதை பொதுப்பணித்துறை – திருச்சி நீர்வள ஆதாரப்பிரிவு கண்காணிப்பு பொறியாளர் செந்தில்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது புதிய அணைக்கட்டு என்பதால் அணையில் திடீரென முழு கொள்அளவான 33 அடி உயரம் நீர் தேக்காமல் படிப்படியாக உயர்த்த அதிகாரிகளுக்கு ஆலோசணை வழங்கினார்.
அதாவது தற்போதுள்ள 23 அடி உயரம் நீர்ப்பிடிப்பு தொடர்ந்து ஒரு வாரகாலம் நீடிக்க வேண்டும் எனவும், அதன்பிறகு படிப்படியாக நீர் மட்டத்தை உயர்த்தலாம் எனவும் கூறினார். அப்போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெய்வீகன், உதவி செயற்பொறியாளர் வேல்முருகன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.