பெரம்பலூர்: அன்னமங்கலம் கிராம பொதுமக்கள் ஆட்சியருக்கு கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
பெரம்பலூர் மாவட்டம், அன்னமங்கலம் அருகே உள்ள விசுவக்குடி நீர்த்தேக்கதில் இருந்து புதிய தண்ணீர் வரத்து வாய்க்காலை செங்குட்டை வழியாக அமைத்து அன்னமங்கலம் ஏரிக்கு தண்ணீர் கொண்டு வர மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதனால் 350 க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவு உள்ள நிலம் பாசன வசதி பெறும். விவசாயம் மட்டுமில்லாமல், அப்பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் உயரும், என்றும் அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.