சிறுவாச்சூர் மதுரகாளியம்ம்ன கோயிலில் தங்கத்தேர் இழுக்கும் தேமுதிகவினர்.
பெரம்பலூர் : தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் பிறந்த நாளையொட்டி, அக்கட்சியினர் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலில் திங்கள்கிழமை இரவு தங்கத் தேர் இழுத்தனர்.
ஆக.25. தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் பிறந்த நாளையொட்டி, பெரம்பலூர் ஒன்றிய தேமுதிக சார்பில் சிறுவாச்சூர் ஸ்ரீ மதுரகாளியம்மன் கோயிலில் இன்று சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து, ஒன்றியச் செயலர் வாசு. ரவி தலைமையில், ஒன்றிய அவைத்தலைவர் கோவிந்தன் முன்னிலையில் மாவட்டச் செயலர் துரை. காமராஜ் தங்கத் தேர் இழுக்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, பொதுமக்களுக்கு பொங்கல் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மாவட்டப் பொருளாளர் சீனி. வெங்கடேசன், துணைச் செயலர் கண்ணுசாமி, பொதுக்குழு உறுப்பினர் ரவிக்குமார், கேப்டன் மன்ற செயலர் தவசி. அன்பழகன், மகளிரணி நிர்வாகிகள் ராணி, கலைச்செல்வி, பொறுப்பாளர்கள் சி. கருணாநிதி, ஒன்றிய பொருளாளர் நீல்ராஜ், கிளை நிர்வாகிகள் எஸ். அழகர், வடிவேல், ஆர். வேல்முருகன், எஸ். அண்ணாமலை, பி. விஜயகாந்து, பி. சந்திரன், இ. சுகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை பெரம்பலூர் ஒன்றியச் செயலாளர் சிறுவாச்சூர் சுரேஷ் செய்திருந்தார்.