பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட, வ.களத்தூர் பேருந்து நிலையத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று மது ஒழிப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் பரப்புரை நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு, வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர் ந. கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார், செல்வகுமார் முன்னிலை வகித்தார்.
பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெ.தங்கதுரை, ஆர்ப்பாட்டத்தினை துவக்கி வைத்து கண்டன உரையாற்றினார், முன்னாள் மாவட்டச் செயலாளர் வீர.செங்கோலன், மாவட்டத் துணைச் செயலாளர் கதிர்வாணன், பசும்பலூர் தமிழ்ச்செல்வன், முனியமுத்து உட்பட 100-க்கும் மேற்பட்டோர் இந்த நிகழச்சியில் கலந்து கொண்டனர்.