பெரம்பலூர் வட்டாரம் வேளாண்மை துறையின் கீழ் அட்மா திட்டம் விதை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கான பயிற்சி நேற்று செப்.7ம் தேதி பெரம்பலூர் வேளாண்மை இணை இயக்குநர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
விதை உற்பத்தியாளர் தொழில்நுட்ப பயிற்சியில் பாளையம் அம்மா பண்ணை மகளிர் குழு உறுப்பினர்கள் மற்றும் பெரம்பலூர் வட்டாரத்தைச் சார்ந்த விதை உற்பத்தியாளர்கள் 40 விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இதில, விதை உற்பத்தி மற்றும் பாதுகாப்பு, நெல், பயறுவகைகள், கடலை, பயிர்களுக்கான சாகுபடி குறிப்புகள், எண்ணெய்வித்து பயிர்களுக்கான ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகம், ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள், அறுவடைக்கு பின் தொழில் நுட்பங்கள், விதைப்பண்ணை பதிவு மற்றும் கலவன்கள் எடுத்தல், வயலாய்வு, பயிர்விலகு தூரம், விதைப்பதிவு கட்டணம், ஈரப்பதம் கணிகாணித்தல், விதை சுத்திகரிப்புப்பணிகள், விதைச்சான்றளிப்பு முறைகள், விதை இரகங்கள் குறித்து உழவர்களுக்கு விளக்கி கூறப்பட்டது.