பெரம்பலூர் நகரம் பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் அருகே வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை
பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன் னிட்டு மாவட்ட முழுவதும் இன்று 156 இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்டடுள்ளது. 95 சிலைகள் காவி ரி ஆற்றிலும், இதர சிலைகள் வெள்ளாறு, கல்லாறிலும் கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நாடு மு ழு வதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மொத்தம் 156 இடங்களில் விநாயகர் சிலை கள் நிறுவபபட்டு வழிபாடுகள் நடந்து வருகின்றது. விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள், ஊர்வலங்கள் நடத்தவும், பிறகு இந்த சிலைகள் அனைத்தும் வருகிற 19ம்தேதி நீர்நிலை களில் கரைத்திடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பெரம் ப லூர் மாவட்டத் தில் நிறுவப்பட்ட 156 சிலைகளில் லப்பைகுடிகாட்டில் அலங்கரிக்கப்படும் உலோக சிலை ஊர்வலமாகக் எடுத்துச் செல்லப்பட்டு கோவிலுக்குள் வைக்கப்படும். இதர 155 சிலைகளில் 95சிலைகள் வரு கிற 19ம்தேதி திருச்சி காவிரி ஆற்றில் கரைக்கப்பட உள்ளது.
மீத முள்ள சிலை களில் மங் க ள மேடு, வி.களத் தூர், கைகளத்தூர் காவல் நிலைய எல்லைப்பகுதியில் உள்ள அருகிலுள்ள வெள்ளாற்றிலும், அரும்பாவூர் காவல் சரகப்பகுதி சிலை கள் கல்லாற்றிலும் 19ம்தேதி கரைக்கப்பட உள்ளன. நக்கசேலம் உள்ளிட்ட சில இடங்களில் காவல் துறை அனுமதியுடன் கிணற்றில் கரைக்கப்பட உள்ளது