பெரம்பலூர் : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பூஜித்த விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே கரைக்கப்பட வேண்டும் – மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ்அஹமது தகவல்.
இது குறித்து மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது:
விநாயகர் சதுர்த்தியின் போது களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை பூஜித்த பிறகு நீர்நிலைகளில் கரைக்கப்படும் வழக்கம் மக்களிடையே உள்ளது. ஆனால் அண்மைகாலமாக இரசாயன வர்ணப்பூச்சிகளுடன் கூடிய விநாயகர் சிலைகளை வழிப்பட்ட பின்னர் அவற்றை நீர்நிலைகளில் கரைப்பதால் நீர்நிலைகள் மாசுப்படுகின்றன.
இதை தவிர்க்கும் பொருட்டு சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி களிமண்ணால் செய்யப்பட்டதும், சுடப்படாததும் மற்றும் எவ்வித இராசயனக்கலவையற்றதுமான, கிழங்குமாவு மற்றும் மரவள்ளிக்கிழங்கிலிருந்து தயாரிக்கும் ஜவ்வரிசி தொழிற்சாலைக் கழிவுகள் போன்ற சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் செய்யப்பட்டதுமான விநாயகர் சிலைகளை மட்டுமே வழிப்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டும்.
இத்தகைய சிலைகளை மட்டுமே நீர்நிலைகளில் கரைக்க வேண்டும். மேலும் இரசாயன வர்ணம்(பெணிண்ட்) பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பது தவிர்க்ப்பட வேண்டும்.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட இடங்களில் மட்டுமே கரைக்கப்பட வேண்டும். அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டுதலின் படி திருச்சி காவிரி ஆற்றில் மட்டுமே கரைக்கப்பட வேண்டும் என இவ்வாறு தெரிவித்துள்ளார்