artificial-legபெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுக்கா அனுக்கூர் கிராமத்தைச் சேர்ந்த கதிர்வேல் என்பவரின் மகன் சுபாஷ் சந்திர போஸ். பெரம்பலூரில் உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகின்றார். வாலிபால் விளையாட்டில் அதிக ஆர்வமுடையவர். கடந்த 17.06.2015 அன்று ஏற்பட்ட விபத்தில் தனது வலது காலினை இழந்த சுபாஷ் சந்திரபோஸ் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட சாதாரன செயற்கை கால் பொருத்தி ஆறு மாத காலம் பயன்படுத்தி வந்தார், ஆனால், நடக்க சிரமப்பட்டதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் உதவி கோரினார்.

இதைக்கேட்ட மாவட்ட ஆட்சியர் டாக்டர் தரேஜ் அஹமது பரிந்துரை செய்ததின் பேரில் முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் ஓட்டோ போக் ஹெல்த் கோ (Ottobock Health Care India Pvt.Ltd., Trichy) என்ற ஜெர்மன் நிறுவனத்தின் திருச்சியிலுள்ள கிளையில் நவீன ரக செயற்கை கால் (pneumatic swing phase control knee joint & Dynamic Motion Foot) வாங்கப்பட்டது.

இந்த செயற்கை காலின் மதிப்பு ரூ.1 லட்சத்து 85 ஆயிரத்து 660 ஆகும். பாதிக்கப்பட்ட மாணவன் தனது பங்காக ரூ.50 ஆயிரம் செலுத்தினார். முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தின் மூலம் ரூ.1 லட்சம் பரிந்துரைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியரின் வேண்டுகோளை ஏற்று ஓட்டோ போக் ஹெல்த் கோ நிறுவனம் மொத்த மதிப்பில் 35,000 தங்களது பங்காக ஏற்றுக்கொண்டது. ஆகமொத்தம் ரூ.ரூ.1,85,660 மதிப்பிலான நவீன செயற்கை காலினை, மாவட்ட ஆட்சியர; அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற விழிப்பு மற்றும் கண்காணிப்புக்குழுவின் கூட்ட நிகழ்வின்போது மாணவன் சுபாஷ் சந்திரபோஸிடம் மாவட்ட ஆட்சியர் மற்றும் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் மருதராஜா ஆகியோர் வழங்கினர்.

புதிய ரக செயற்கை கால் பொருத்தப்பட்டபின் தனக்கு நடக்க மிகவும் எளிதாக உள்ளதாகவும், எடை குறைவாக இருப்பதால் கால் பொருத்தப்பட்ட பின், சுமையாக தெரியவில்லை நடக்கவும் எளிமையாக உள்ளதாகவும் சுபாஷ் சந்திர போஸ் தெரிவித்தார். மேலும், கால்களை இழந்த கவலை இல்லாமல் மீண்டும் வாலிபால் விளையாட்டில் பங்கேற்க முயற்சிக்கப்ப போவதாகவும் தன்னம்பிக்கையுடன் தெரிவித்த மாணவன், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும், ஓட்டோபோக் நிறுவனத்திற்கும் தனது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார். பின்னர், கூட்ட அரங்கிற்குள்ளேயே அனைவரின் முன்னிலையிலும் நடந்து காட்டினார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!