பெரம்பலூர்: வேப்பநதட்டை வட்டம் அரும்பாவூர் அருகே உள்ள விஜயபுரத்தை சேர்ந்தவர் கொளஞ்சி மகள் விஜயலட்சுமி.(21).

இவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சேலம் மாவட்டத்தை சேர்ந்த ராமசாமி (27) என்பவருடன் திருமணம் நடந்தது.

இந்த திருணமத்தில் விரும்பம் இல்லை என கூறப்படுகிறது. மோஹித் என்ற 9 மாத ஆண்குழந்தை ஒன்று உள்ளது. கணவர் ராமசாமி குவைத் நாட்டிற்கு வேலை தேடி சென்றுள்ளார்.

இந்நிலையில் மனமுடைந்து காணப்பட்ட விஜயலட்சுமி தழுதாழையில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு வந்துள்ளார். மனமுடைந்த விஜயலட்சுமி தனது 9 மாத ஆண் குழந்தையை அருகே உள்ள பிரகாஷ் என்பவரது வயலில் உள்ள கிணற்றில் கொன்று வீசி உள்ளார்.

இது அவ்வழியாக சென்றவர்களுக்கு தெரிய வந்ததால் கிராம நிர்வாக அலுவலர் கலையரசிக்கு தகவல் தெரிவித்தனர்.

கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் அரும்பாவூர் காவல் நிலைய ஆய்வாளர் தங்வேல் தலைமையிலான காவலர்கள் வழக்குப் பதிந்து விஜயலட்சுமியை கைது செய்துள்ளனர்.

குழந்தையின் உடலை கைப்பற்றிய காவல் துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பெற்ற தாயே தனது குழந்தையை கொன்று கிணற்றில் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பபை அப்பகுதியில் ஏற்படுத்தி உள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!