727 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாசி வழங்கினார்.
அதன் விபரம் பின்வருமாறு:
வேப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று (24.08.201) நடைபெற்ற நிகழ்ச்சியில் 727 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை சிதம்பரம் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் மா.சந்திரகாசி வழங்கினார்.
பின்னர் நடாளுமன்ற உறுப்பினர் பேசியதாவது:
சமையல் அறையில் நாளும் உழன்று கொண்டிருக்கும் இல்லத்தரசிகளின் வேலைப்பளுவையும், நேரத்தையும் வெகுவாகக் குறைக்கும் வகையில் விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி வழங்கும் திட்டத்தினையும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு பயிலும் அனைத்து பிரிவு மாணவ, மாணவியரும் சிரமமின்றி பள்ளிக்கு சென்று வர ஏதுவாக விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தினையும், பள்ளி மற்றும் கல்லூரி பயிலும் ஏழை மாணவ,மாணவிகளின் நலன் கருதி அவர;களுக்கு விலையில்லா மடிக்கணினி, பள்ளி செல்லும் சிறார்களின் அறிவினை வளர்க்கும் வகையில் அவர்களுக்கு விலையில்லா கணித உபகரண பெட்டி, மேப், உள்ளிட்ட ஏராளமான உதவிகளை தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறது.
எனவே மாணவ, மாணவிகள் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் வழங்குகின்ற உதவிகளை பயன்படுத்தி தங்களின் வாழ்க்கையை வளப்படுத்தி கொள்வதுடன், தாம் வாழும் நாட்டினையும் ஓர் அறிவு சார்ந்த தேசமாக உருவாக்கிட அனைத்து மாணவ, மாணவிகளும் உறுதியேற்றிட வேண்டும் என பேசினார்.
இந்நிகழ்ச்சியில் துங்கப்புரம் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 180 மாணவ, மாணவிகளுக்கும், வேப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 203 மாணவ, மாணவிகளுக்கும், குன்னம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 137 மாணவர்களுக்கும், குன்னம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 202 மாணவிகளுக்கும் என மொத்தம் 727 நபர்களுக்கு இன்று விலையில்லா மிதிவண்டிகளை சிதம்பரம் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் மா.சந்திரகாசி வழங்கினார். அதனைத்தொடர்ந்து லப்பைக்குடிகாடு பேரூராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் மாணவ,மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாசி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சகுந்தலா கோவிந்தன், வேப்பூர் ஒன்றியக் குழுத் தலைவர் கிருஷ்ணக்குமார், லப்பைக்குடிகாடு பேரூராட்சி துணைத்தலைவர் முகமது தஸ்லின், பள்ளி தலைமை ஆசிரியர் கருப்பசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.