பெரம்பலூர் : பெரம்பலூரில் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மகிளா காங்கிரசார் வெங்காய மாலை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பு மகிளா காங்கிரஸ் கட்சியினர் சார்பாக விலைவாசி உயர்வு, கட்டுக்கு அடங்காத வெங்காய விலை ஏற்றம், சுய உதவிக் குழக்களை ரத்து செய்வது கண்டித்தும், பூரண மது விலக்கை அமல்படுத்துக் கோரி மத்திய, மாநில அரசுகளை கண்டித்து இன்று மகிளா காங்கிரஸ் கட்சியினர் மாவட்ட பொருப்பாளர் இந்திராணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாவட்ட தலைவர் வழக்கறிஞர். த.தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருப்பாளர்கள், தேனூர்.கிருஷ்ணன், வெங்கனூர் தங்கவேல், அத்தியூர் சேகர், சிவாஜிமூக்கன், நகர செயலாளர் எம்.எஸ்.ஆர்.சேகர், வட்டாரத் தலைவர், ராமசாமி, இளையபெருமாள், செங்கமலை உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.