பெரம்பலூர்: பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கண்டித்தும், அதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், ஆன் லைன் வர்த்தகத்தை தடை செய்யக் கோரியும், தலித் மக்கள் தீது தாக்குதலை தடுக்கக் கோரியும், எழுத்துரிமை, பேச்சுரிமையை பாதுகாக்க கோரியும் மக்கள் நலக் கூட்டியக்கம் சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை அருகே இன்று (செவ்வாய்க்கிழமை) நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுகவை சேர்ந்நத கட்சிப் பொறுப்பாளர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.