பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பெருமத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி மகன் செல்லக்கண்ணு(65). இவர் நேற்று முன்தினம் மாலை
பெருமத்தூர் கிராமத்தில், ஊருக்கு நடுவேகடைத்தெருவில் மாரியம்மன் கோவிலில் நண்பர்கள் சிலருடன் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது, அதே ஊரைச்சேர்ந்த வேப்பூர் ஒன்றிய கவுன்சிலர் ஷோபனாவின் கணவர் சத்தியமூர்த்தி(45) ,என்பவர் அவரது காரை சாவியுடன் நிறுத்தி உள்ளார்.
அங்கு வந்த அவரின் நண்பரான கிருஷ்ணசாமி மகன் பூபதி(38). என்பவர் அங்கிருந்த சத்தியமூர்த்தியுடன் விளையாட்டாக பேசி கொண்டனர். அப்போது காரை ஓட்ட முடியுமா என்ற கோணத்தில் விவாதம் ஏற்பட்டது. அப்போது திடீரென கிருஷ்ணசாமி இயக்கியுள்ளார். இதில் நிலை தடுமாறிய கார் அதிவேகமாக சென்று மாரியம்மன் கோவில் அமர்ந்திருந்த முதியவர் செல்லக்கண்ணு மீது மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே செல்லக்கண்ணு உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இருவர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து செல்லக்கண்ணுவின் மனைவி சரோஜா(55) கொடுத்த புகாரின் பேரில் மங்களமேடு காவல் நிலையத்தினர் வழக்கு பதிவு செய்து பூபதியை கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர்.