பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு வேளாண்மைத்துறையின் மூலம் வழங்கப்பட்டுவரும் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவது குறித்தும், விவசாயிகளுக்கு அந்த திட்டங்களின் பயன்பட்டிருக்கின்ற விதம் குறித்தும் வாரந்தோறும் விவசாயிகளின் விளைநிலங்களுக்கே நேரடியாகச்சென்று மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது பார்வையிட்டு விவசாயிகளுடன் கலந்துரையாடி ஆய்வு செய்து வருகிறார்.
அந்த வகையில் இன்று வேப்பந்தட்டை வட்டம் அன்னமங்கலம் பகுதியில் சம்மங்கி, மக்காச்சோளம் பயிரிட்டுள்ள விவசாயிகளின் நிலங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முதலில் அன்னமங்கலத்தில் மணி என்பவரது நிலத்தில் சொட்டு நீர் பாசனத்தின் மூலம் 1ஹெக்டேர் பரப்பளவில் சம்மங்கி சாகுபடி செய்துள்ளதை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் அரசின் நலத்திட்டங்கள் உங்களுக்கு முறையாக வழங்கப்பட்டுள்ளதா என்று கேட்டறிந்தார், அப்போது தேசிய தோட்டக்கலைத்திட்டத்தின் மூலம் மலர் சாகுபடி செய்வதற்காக ரூ.7,500ம், சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க நூறு சதவீத மானியமாக ரூ.85,400ம் தோட்டக் கலைத் துறையின் மூலம் வழங்கப்பட்டது. இந்த மானியத்தொகை பெரிதும் பயனுள்ளதாக விவசாயி மணி தெரிவித்தார்.
பின்னர் 2.5 ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிட்டிருந்த விவசாயி தங்கம் என்பவரின் நிலத்தைப் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் மக்காச்சோளத்தில் தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ஒரு ஹெக்டேருக்கு 10 டன் மகசூல் எடுப்பதற்கான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவது பயனுள்ள வகையில் அமைந்திருக்கிறதா என்றும் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் இந்திரா, வேளாண்மைத்துறை உதவி இயக்குநர் மனோகரன் ஆகியோர் உடனிருந்தனர்.
அதனைத்தொடர்ந்து விசுவகுடி அணைக்குச்சென்ற மாவட்ட மாவட்ட ஆட்சியர் அங்கு நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டு குறித்த காலத்திற்குள் பணிகளை முடிக்க வேண்டுமென்று துறை அலுவலர்களுக்கு அறிவரை வழங்கினார்.
பின்னர் தொண்டமாந்துறை மற்றம் எசனையில் கட்டப்பட்டுள்ள தனிநபர் கழிப்பறைகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் தனிநபர; கழிப்பறைகளின் முக்கயத்துவம் குறித்தும், சுகாதாரமான வாழ்க்கையின் தேவை குறித்தும் பொதுமக்களிடம் விளக்கிக் கூறினார்.