பெரம்பலூர்: விவசாய நிலங்களை கையகப்படுத்தும் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட 10-கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுப்பட்ட (CITU)இந்திய தொழிற்சங்க மையத்தினர் 33-பேர் கைது செய்யப்பட்டனர்.
பொதுத்துறை நிர்வாகங்களை தனியாருக்கு வாற்பனை செய்யக்கூடாது,விவசாய நிலங்களை கையகப்படுத்தும் சட்டத்தை திரும்ப பெறவேண்டும்.வீடு இல்லாத அனைவருக்கும் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூரில் சிஐடியு வின் இந்திய் தொழிற்சங்க மையத்தின்சார்பில் மறியல் போராட்டம் நடைப்பெற்றது.
ஸ்டேட் பேங்க் அருகேயுள்ள சாலையில் மறியலில் ஈடுப்பட்டனர்.மறியலில் ஈடுப்பட்ட 2-பெண்கள் உள்பட 33-பேர் கைது செய்யப்பட்டனர்.