பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே வயிற்று வலியால் அவதியுற்று விஷம் குடித்து சிகிச்சை பெற்று வந்த பள்ளி மாணவி இன்று அதிகாலை உயிரிழந்தார்.
வேப்பந்தட்டை அருகேயுள்ள வி.களத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சி மகள் புஷ்பா (16). இவர், வி.களத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், தொடர் வயிற்று வலியால் அவதயுற்ற புஷ்பா பல மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றும் பலனளிக்கவில்லையாம். இந்நிலையில், கடந்த 6 ஆம் தேதி வலியால் மனமுடைந்த புஷ்பா விஷம் குடித்தார்.
பெரம்பலூர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று அதிகாலை உயிரிழந்தார்.
இதுகுறித்து, அவரது தாய் மீனா (44) அளித்த புகாரின்பேரில் வி.களத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.