பெரம்பலூர் மங்லமேடு அருகே விஷம் குடித்து ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.
மங்கலமேடு அருகேயுள்ள ரஞ்சன்குடி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி மகன் பெரியசாமி (50). இவர், கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தாக கூறப்படுகிறது.
பல்வேறு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்றும் உடல் சீர் பெறவில்லை. இதனால் மனமுடைந்த பெரியசாமி விஷம் குடித்தார். பெரம்பலூர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட அங்கு உயிரிழந்தார்.
இதுகுறித்து அவரது மகன் செல்வராஜ் (33) அளித்த புகாரின்பேரில், மங்கலமேடு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.