பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரம் அருகே உள்ள வி.ஆர்.ஆர்.எஸ் புரம் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் மகன் துளசிராஜன்(65), இவர் நேற்று இரவு பூச்சு மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதுபற்றி அறிந்த அவரது குடும்பத்தார் முதியவர் துளசிராஜனை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதனைத்தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் துளசிராஜன் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து அவரது மனைவி ராமலட்சுமி(55) அளித்த புகாரின் பேரில் மங்களமேடு காவல் நிலையத்தில் எஸ்.எஸ்.ஐ., பூபதி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.